1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ricky ponting comment on virat kohli not winning cups

கோலி மட்டும் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஒரு கோப்பைய கூட மிஸ் பண்ணிருக்க மாட்டோம்… ஜாம்பவான் வீரர் கருத்து!

விராட்கோலி
சமீபகாலமாக இந்திய அணி ஐசிசி கோப்பைகள் எதையும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இந்திய அணி ஐசிசி கோப்பைகள் தவிர மற்ற எல்லா தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. கோலி, ரோஹித் ஷர்மா,  போன்ற உலகத்தரமான வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

விராட் கோலி அனைத்துத் தொடர்களிலும் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறார். ஆனாலும் அவரிருக்கும் அணி தொடர்ந்து தோற்று வருகிறது. சமீபத்தைய ஐபிஎல் தொடரில் அவர் 700க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்று ஆரஞ்சு தொப்பியை பெற்றார். ஆனால் பெங்களூர் அணி ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறியது. இது சம்மந்தமாக கோலி மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் கோலி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலி போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருந்திருந்தால் நாங்கள் எந்தவொரு கோப்பையையும் மிஸ் பண்ணியிருக்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. நான் இருக்கேன்! காலில் விழுந்த ரசிகருக்கு தோனி கொடுத்த வாக்குறுதி!