வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:40 IST)

நாம் இந்த தவறை செய்தாலே மேட்ச்சை இழக்கிறோம் என்று அர்த்தம்… குஜராத் கேப்டன் கில் ஆதங்கம்!

நேற்று நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்றது. குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து 199 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.  இதனால் அந்த அணி தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் அந்த அணியின் பின் வரிசை வீரரான ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆடி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 29 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார்.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் ” கேட்ச்களை கோட்டை விட்டாலே தோல்வி உறுதியாகிவிடும். நாங்கள் குறைவான ஸ்கோர் அடித்ததாக நினைக்கவில்லை. ஏனென்றால் 199 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். 15 ஆவது ஓவர் வரை சிறப்பாக விளையாடினோம். ஆனால் அதன் பிறகு கேட்ச்களை விட்டாததால் அழுத்தம் அதிகமாகிவிட்டது. நாம் எதிர்பார்க்காதவர்கள்தான் அதிரடியாக விளையாடி நமக்கு ஷாக் கொடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.