செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:22 IST)

இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் பலமுறை என் மனதில் நிகழ்த்தி இருக்கிறேன்.. ஆட்டநாயகன் ஷஷாங்க்!

நேற்று நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்றது. குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து 199 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.  இதனால் அந்த அணி தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் அந்த அணியின் பின் வரிசை வீரரான ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆடி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 29 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் “இந்த வெற்றியை என்னால் இன்னும் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் பலமுறை என் மனதில் விளையாடியுள்ளேன். அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சி. எதிரணியில் பவுலர்களாக இருக்கும் ரஷீத் கான், உமேஷ் யாதவ், மோகித் சர்மா போன்றவர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்கள். ஆனால் நான் அவர்களின் பெயர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் வீசும் பந்துக்கு ஏற்ப ரியாக்ட் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.