1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman gill surpassed sachin record in ipl

சச்சினின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்! நேற்றைய போட்டியில் எட்டிய மைல்கல்!

சுப்மன் கில்
இந்திய அணியில் சமீபத்தில் இடம்பிடித்து மூன்று வகையான போட்டிகளிலும் கலக்கி வருகிறார் இளம் வீரர் சுப்மன் கில். இப்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நேற்றைய SRH அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் குஜராத் அணிக்காக 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

குஜராத் அணிக்காக 29 இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள அவர் இந்த மைலால்லை எட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார். கில்லை விட குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர்களாக கே எல் ராகுல் (23 இன்னிங்ஸ்- பஞ்சாப்) ராபின் உத்தப்பா (28 இன்னிங்ஸ்-கேகேஆர்) ஆகியோர் உள்ளனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
‘நீ பந்து போடு… நான் சிக்ஸ் அடிக்கிறேன்’ – SRH பவுலரிடம் சொல்லி அடித்த சுப்மன் கில்!