திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (09:53 IST)

நடிகை ராஷ்மிகா மந்தனாவோடு டேட்டிங்கா? சுப்மன் கில் பதில்!

இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக உருவாகி வருகிறார் சுப்மன் கில். சமீபத்தில் டி 20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் சதம் அடித்துக் கலக்கி வருகிறார். இதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளார் 23 வயது சுப்மன் கில். இந்நிலையில் அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவோடு டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அதை அவர் தரப்பு மறுத்துள்ளது. ஏற்கனவே சுப்மன் கில், சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிப்பதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.