முதல் சத வாய்ப்பை தவறவிட்ட சுப்மன் கில்!

Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:07 IST)

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் ஷர்மா விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் புஜாரோவோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில்.

அதிரடியாக விளையாடிய அவர் 146 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்ட் ஆனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தற்போது 175 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :