ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 மே 2024 (18:17 IST)

ஆர்சிபிக்கு எதிராக விளையாடக் கூடாது.. ரிஷப் பண்டுக்கு தடை! – சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

நாளை ஆர்சிபி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இடையே ஐபிஎல் லீக் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி அணி சிக்கலில் உள்ளது.



ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப்ளே ஆப் தகுதி பெற போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொள்கின்றன. 12 போட்டிகளில் 6ல் வென்று 12 புள்ளிகள் வைத்திருக்கும் டெல்லி அணி அடுத்த 2 போட்டிகளையும் வென்றால் ப்ளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது.


இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக விளையாட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக பந்து வீசியதால் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது. நாளை போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடாவிட்டால் யார் கேப்டன்ஷிப் செய்வார்கள்? ரிஷப் பண்ட்க்கு மாற்றாக மிடில் ஆர்டரில் யார் இறக்கப்படுவார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் இல்லாதது அணிக்கு பின்னர்டைவை ஏற்படுத்துமா என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K