வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:40 IST)

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி… ரிஸர்வ் நாளில் இன்று மீண்டும் தொடக்கம்!

ஆசியக் கோப்பையின் சூப்பர் நான்கு சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் மழை விட்டுவிட்டு பெய்ய தொடங்கிய நிலையில் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்படட்து. இதனால் போட்டி ரிசர்வ் நாளான இன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இன்று மதியம் 3 மணிக்கு இந்திய அணி தனது பேட்டிங்கை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. நாளை இலங்கையோடு மீண்டும் சூப்பர் 4 சுற்றில் விளையாட உள்ளது.