1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (08:50 IST)

டெஸ்ட்டில் 600 விக்கெட் என்பதெல்லாம் கனவில்தான் நடக்கும்… ஸ்டுவர்ட் பிராட் குறித்து ஷாகீன் அப்ரிடி!

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக இருந்து வருகின்றனர் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டுவர்ட் பிராடும். இருவருமே அடுத்தடுத்து மைல்கல் சாதனைகளை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களுக்கு மேல் எடுத்த ஸ்டுவர்ட் பிராட் கடைசி ஆஷஸ் தொடருக்கு பின்னர் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவரின் சாதனைகளை புகழ்ந்து பேசி பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகீன் அப்ரிடி. அதில் “என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்தான். பிராட் பந்துவீசுவதை அன்று பார்த்தேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் வீழ்த்துவதெல்லாம் என்னைப் பொறுத்தவரை கனவில்தான் நடக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டே என் உடல்தகுதியை சரியாக வைத்திருக்க உதவுகிறது. நான் டி 20 உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதன் மூலம்தான்” எனக் கூறியுள்ளார்.