செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (17:48 IST)

சிக்ஸர்களை பறக்க விட்ட சேவாக்: உறைபனியின் மேல் கிரிக்கெட் போட்டி!

சுவிட்சர்லாந்து நாட்டில் செயிண்ட் மோரிட்ஸ் நதியின் உறைபனியின் மேல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
 
செயிண்ட் மோரிட்ஸ் நதி அதிக உறைநிலையின் காரணமாக உறைந்துள்ளது. இந்த நதி 200 டன் எடையை தாங்கும் சக்தி கொண்டது. இங்கு கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஐஸ் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
 
அந்த உறைந்தபனியின் மீது மைதானம் அமைக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு போட்டிகள் நடைபெறும். அதில் இந்த ஆண்டு வீரேந்திர சேவக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியும், சாகித் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும் மோதின.
 
இந்த போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் பல முன்னாள் ஜாம்பவான்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டதால் அதிக முக்கியத்துவம் பெற்றது இது. மேலும் இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த சேவாக் 62 ரன்கள் குவித்தார். இதில் அவர் ஐந்து சிக்ஸர்களை பறக்க விட்டார்.