வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (15:26 IST)

இதனால்தான் கோலி ஒரு சாம்பியன்… புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர் டிராவிட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய முக்கியக்காரணியாக இருந்து 186 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் கோலி. இந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் கோலி.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய கோலியை பயிற்சியாளர் டிராவிட் பாராட்டி இருக்கிறார். அவரது பேச்சில் “அணிக்கு என்ன தேவையோ அதை மனதில் வைத்து விளையாடுபவரே சிறந்த டீம் ப்ளேயர். எனக்கு தெரிந்து கோலி, மிகச்சிறந்த சிக்ஸ் அடிக்கும் வீரர். ஆனால் அவர் இறங்கி அடிக்காமல், நிதானமாக விளையாட ஆரம்பித்தார். அவரின் இந்த பண்புதான் அவரை சாம்பியன் வீரராக ஆக்குகிறது” எனக் கூறியுள்ளார்.