வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (07:52 IST)

TNPL 2023: திருப்பூருக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் அதிரடி ஆட்டம்!

சமீபத்தில் நடந்த ஐபில் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் “யார்டா இந்த பையன்’ எனக் கவனிக்க வைத்தார். . அந்த போட்டியில் 46 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட் ஆனார். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அன்கேப்ட் பிளேயர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரை விட அதிக தொகைக்கு அவர் TNPL போட்டிகளில் லைகா கோவை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சமீபத்தில் தொடங்கிய இந்த தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கோவை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. சாய் சுதர்சன், அதிகபட்சமாக 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் 86 ரன்கள் அடித்த சாய் சுதர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.