1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sachin wishes Mithali raj for her retirement

ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்..! பாராட்டுகளை தெரிவித்த சச்சின்!

Sachin
பிரபல இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அளவுக்கு பெண்கள் அணியை பிரபலபடுத்தியவர் மிதாலி ராஜ். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், பேட்ஸ் வுமனாகவும் இருந்த மிதாலி ராஜ் பல்வேறு நாடுகளுடனான போட்டிகளில் இந்திய பெண்கள் அணியை வெற்றிபெற செய்தவர். மிதாலி ராஜ் வருகைக்கு பிறகு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் அதிகளவில் ரசிகர்கள் உருவானார்கள்.

கடந்த 23 ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிதாலி ராஜ் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவரை பாராட்டியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “கடந்த 23 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உங்கள் பங்கு மகத்தானது. இந்தியாவிற்காக விளையாட நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்து சிறப்பாய் அமைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தென்னாப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு கொடுத்த இந்தியா!