1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (17:16 IST)

சச்சின் டெண்டுல்கர் பிரபல நிறுவனத்தில் முதலீடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாரத் ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் பிரபல  ஸ்பின்னி நிறுவனத்தில்  முதலீடு செய்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை தளமான ஸ்பின்னி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளதுடன் அந்நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிட்டராகவும் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே இந்நிறுவனத்தில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இணைந்துள்ள நிலையில் தற்போது சச்சின் டெண்டுலக் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.