வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (07:37 IST)

இந்திய வீரர்களைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்ன சச்சின் டெண்டுல்கர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் ஆனது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்தது. ஆஸி அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்களை இழந்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு நிதானமாக விளையாடி 43ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 137 ரன்கள் சேர்த்தார்.

இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் சிலர் சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். வீரர்கள் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டனர். பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சச்சின், சோகத்தில் நின்ற இந்திய வீரர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.