0.08 வினாடியில் ஸ்டெம்பிங்; மின்னல் வேக தோனி: வைரல் வீடியோ!

Last Updated: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:51 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியின் வெற்றியோடு தோனியின் மின்னல் வேக சாதனையும் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் ஸ்டெம்பிங் குறித்து சொல்லி தெரிய வேண்டிய எதுவும் இல்லை. 
 
நேற்றைய போட்டியின் போது தோனி மின்னல் வேக ஸ்டெம்பிங் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜடேஜா வீசிய 28 வது ஓவரின் 5 வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பவுலை தோனி ஸ்டம்பிங் செய்தார். 
 
இந்த ஸ்டம்பிங்கை தோனி 0.08 வினாடியில் செய்துள்ளார். இதற்கு முன்பு 0.09 நொடியில் ஸ்டம்பிங் செய்துள்ள இவர் தனது சாதனையை தானே முறியடித்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :