1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sachin applauded shami last over

ஒரு ஓவரிலேயே தன்னை எடுத்தது சரின்னு காட்டிட்டார்… ஷமியை பாராட்டிய ஜாம்பவான் வீரர்!

இந்தியா
இந்திய அணியின் வீரர் ஷமியை பாராட்டி சச்சின் ட்வீட் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றி பெற 11 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் முகமது ஷமி கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதையடுத்து ஷமியின் மீதான நம்பிக்கை அதிகமாகியுள்ளது. நேற்றைய அவரது ஓவரைப் பற்றி ட்வீட் செய்துள்ள சச்சின் “ஷமி நேற்றைய பந்துவீச்சின் போது தன்னை அணியில் எடுத்தது சரி என்று நிரூபித்துவிட்டார். பூம்ராவுக்கு சரியான மாற்று இவர்தான்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth