திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (13:14 IST)

ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

Pat Cummins
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 மேலும் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக ஒருவரை நியமனம் செய்யாமல், சில வீரர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவில் உள்ளவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த குழுவில் டேவிட் வார்னர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva