ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (15:57 IST)

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று நடந்த ஒரு போட்டி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த நிலையில் அந்த போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் பரிதாபகரமாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் ஒரே ஒரு போட்டியில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்தே வெளியேறியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் “நாங்கள் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை என்றாலும், கடந்த 12 மாதமாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அதனால் தான் மக்கள் திரும்பவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.