திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (15:28 IST)

மச்சானுக்குக் கல்யாணம்… முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை ஆஸி அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதையடுத்து விரைவில் ஒருநாள் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் இடையில் தாயாரின் மரணத்துக்காக இந்தியாவில் இருந்து திரும்பினார் பேட் கம்மின்ஸ். அதனால் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் வரும் வெள்ளியன்று தொடங்கும் ஒருநாள் தொடரிலும் பேட் கம்மின்ஸ் இடம்பெறாததால் ஸ்டீவ் ஸ்மித்தே கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதே போல இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அவரது மைத்துனரின் கல்யாணத்துக்காக அவர் இந்த போட்டியில் விடுப்பு எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.