தொடர்புடைய செய்திகள்
- டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.. ஆனால்?- ரோஹித் ஷர்மா வருத்தம்!
- ஐந்து நாட்களில் வசூலில் சாதனை படைத்த சூரியின் ‘கருடன்’!
- எதிர்த்து போட்டியிட்ட அனைவருக்கும் டெபாசிட் காலி.. சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி..!
- இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை.. தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி..!
- ‘கோலி அந்த இடத்தில் இறங்கவேண்டும்… இல்லையேல் அணியிலேயே இருக்க வேண்டாம்’ – ஆஸி அணி முன்னாள் வீரர் கருத்து!
சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வீரரும் படைக்காத சிந்தனை… 600 சிக்ஸர்களை விளாசி ரோஹித் ஷர்மா முதலிடம்!
நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா 3 சிக்ஸர்களை விளாசினார்.
இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் அவர் ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்கள், ஷாகித் அப்ரிடி 476 சிக்ஸர்கள், மெக்கல்லம் 398 சிக்ஸர்கள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
மேலும் இந்த போட்டியின் மூலம் அவர் 4000 டி20 ரன்களையும் கடந்துள்ளார். அதை அவர் குறைந்த பந்துகளில் எட்டியுள்ளார். 2860 பந்துகளில் அவர் அதிவேகமாக 4000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.