வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2016 (15:00 IST)

ரோஹித் சர்மா அதிரடியில் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி; 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நடைபெற்று வரும் டி 20 உலகக்கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
 

 
டி 20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது.
 
அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 57 பந்துகளில் [9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 98 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 20 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 31 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெரோம் டெய்லர், சுலைமான் பென் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் அடித்த 20 ரன்கள் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] அந்த அணியின் அதிகப்பட்சமாகும்.
 
பெரிய அளவிலான ரன்னை சேஸிங் செய்கையில் வலுவான பாட்னர்ஷிப் அமைவது அவசியம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அது அமையவில்லை. இந்திய தரப்பில் மொஹமது சமி, பவன் நெகி, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.