1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 4 மே 2015 (09:29 IST)

முடிந்தது நிச்சயம் ; விரைவில் திருமணம் - ரோகித் சர்மா ' டுவிட் '

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
 
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரோகித் சர்மா. இவர் தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக திறம்பட செயலாற்றிகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆம் இதுவரை பேட்சுலராக வலம் வந்துகொண்டிருந்த ரோகித் சர்மா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். ரோகித் சர்மாவின் மனப்பெண் பெயர் ரித்திகா சஜ்தே ஆகும். 
 
ரித்திகா சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் விளம்பர மேலாளர் பணியை திறம்பட நிர்வகித்து வருகிறார். தொடக்கத்தில் நட்பாக இருந்த இவர்களது பந்தம் பின்னாளில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என ‘டுவிட்’ செய்துள்ளார் ரோகித் சர்மா.