வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (08:06 IST)

பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்கவுள்ள ரோஹன் ஜெட்லி?

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம்.

இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐசிசி தலைவரானவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜெய்ஷா. அவருக்கு வயது 35 தான்.

அவர் ஐசிசி தலைவர் ஆகியுள்ளதால் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லியை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இப்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுததடுத்து பாஜக பிரமுகர்களின் வாரிசுகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முக்கியப் பதவிகளை ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.