1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant will keep wickets today latest update

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. நான்காவது போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

கடந்த போட்டியின் போது கீப்பிங் செய்யும் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்ததாக தகவல் வெளியாகின. இது குறித்து ஆலோசித்து வருவதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டெண்டோஷட் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள கடைசி கட்ட தகவலின் படி “இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டே கீப்பிங் செய்வார்” என்று சொல்லப்படுகிறது. அவருக்கு காயம் குணமடைந்துள்ளதாகவும், விரல்களில் வலி இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?