சவால விட்ட... டிம் பெய்னுக்கு ஷாக் கொடுத்த ரிஷப் பண்ட்

Last Updated: செவ்வாய், 1 ஜனவரி 2019 (18:15 IST)
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் சவாலை ஏற்று அவருக்கு ஷாக் கொடுத்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
 
அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இரு இந்திய அணியை சேர்ந்த ரிஷப் பந்திற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்னுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, ஒருநாள் அணிக்கு தோனி வந்துவிட்டார். இதனால் உன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனா். பிக்பாஷ் போட்டிகளில் சோ்த்துவிடவா? என் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறாயா? நானும், எனது மனைவியும் படத்திற்கு செல்ல வேண்டியுள்ளது” என்று டிம் பெய்ன் கேலி செய்தார்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்த போது, நீங்கள் ஒரு தற்காலிக கேப்டன். உங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும் என ரிஷப் பதில் அளித்தார். 
 
இந்நிலையில், டிம் பெய்னின் சவாலை நிறைவேற்றும் விதமாக ரிஷப் பண்ட் பெய்னின் குழந்தைகளை பார்த்துக்கொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :