வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:04 IST)

மும்பையில் செட்டில் ஆனேனா? நடிகர் சூர்யா அளித்த பதில்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனதாக தகவல்கள் பரவின. அது குறித்து அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது அது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.

அதில் “என் குழந்தைகள் இருவரும் மும்பையில் படிக்கிறார்கள். அதற்காக அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். மற்றபடி நான் மும்பையில் எல்லாம் செட்டில் ஆகவில்லை” எனக் கூறியுள்ளார்.