வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (07:23 IST)

கோலி அடுத்த உலகக் கோப்பையில் விளையாடவேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள்… ரிக்கி பாண்டிங் கருத்து!

கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் விராட் கோலி.  தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கோலி நவம்பர் 5 ஆம் தேதி தன்னுடைய 35 ஆவது பிறந்த நாளன்று நடைபெற்ற போட்டியில் 49 ஆவது சதத்தை அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

இப்போது 35 வயதாகும் கோலி, அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. அதற்கான உடல் தகுதியை கோலி பெற்றிருந்தாலும், 39 ஆவது வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்திய ரசிகர்களை தவிர, மற்ற நாட்டு ரசிகர்கள் யாருமே விரும்ப மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.