1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 27 மே 2025 (07:50 IST)

மும்பையை வென்று முதல் இடத்துக்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ்… இரண்டாம் இடம் யாருக்கு?

மும்பையை வென்று முதல் இடத்துக்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ்… இரண்டாம் இடம் யாருக்கு?
நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பிரயான்ஷ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்லீஷ் ஆகியோர் அரைசதம் அடிக்க, இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளோடு முதலிடத்துக்கு சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆர் சி பி அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில் அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டாவது அல்லது முதல் இடத்துக்கு நகரும். குஜராத் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும். ஆர் சி பி அணி தோற்றால் குஜராத் இரண்டாவது இடத்திலும், ஆர் சி பி மூன்றாவது இடத்திலும் தொடரும்.