திங்கள், 8 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 நவம்பர் 2025 (09:31 IST)

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. வழக்கமான அந்த அணியில் தனி வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் கடந்த சீசனில் ரஜத் படிதார் எனும் இளைஞர் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பல மேட்ச் வின்னிங் இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதுவே வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம்.

கடந்த சீசனில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்கள். இந்நிலையில் அடுத்த சீசனுக்கு அந்த அணித் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் மினி ஏலத்துக்கு அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கி உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட யாஷ் தயாளை தக்கவைத்துள்ளதன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த சீசனில் யாஷ் தயாள் பெங்களூர் அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.