வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 மே 2021 (12:04 IST)

யார் பலசாலின்னு பாப்போமா..? – ஜெர்சியை கழட்டி சிக்ஸ் பேக் காட்டிய கெயில், சஹால்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆர்சிபி வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் சஹால் மைதானத்தில் சட்டையை கழற்றி கொடுத்த போஸ் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

ஆர்சிபி தோற்றாலும் மைதானத்தில் செய்த ரகளைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆர்சிபி வீரர்கள் க்றிஸ் கெயிலும், யுவேந்திர சஹாலும் யார் பலசாலி என காட்டி கொள்ள ஜெர்சியை கழற்றி தங்களது உடலை காட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.