திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 25 மே 2023 (08:58 IST)

மாம்பழம் சாப்பிடுறியா செல்லம்..? – நவீனை வன்மம் தீர்த்த கோலி ரசிகர்கள்!

Mango RCB Fans
நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் லக்னோ வீரர் நவீனை ட்ரோல் செய்து ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி வெறும் 101 ரன்கள் மட்டுமே பெற்று மும்பை அணியிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பையின் இந்த வெற்றி மும்பை அணி ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோ இல்லையோ RCB ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகளின் போது ஆர்சிபி – லக்னோ இடையேயான போட்டியில் கோலிக்கும், கௌதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. லக்னோ அணிக்காக விளையாடி வரும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் அந்த போட்டியின் முடிவில் கோலி கை கொடுத்தபோது தட்டிவிட்டதும், சண்டைக்கு சென்றதும் கோலி ரசிகர்களை நவீன் மீது கோபம் கொள்ள செய்தது.

Kohli Ghambir fight


பின்னர் கோலியிடம் தான் நடந்து கொண்டது குறித்து நவீன் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும் அடுத்த லீக் போட்டிகளில் ஆர்சிபி தோற்றபோது மாம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு ஆர்சிபியின் தோல்வியை கொண்டாடுவது போல இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டது ஆர்சிபி ரசிகர்களை கோபமாக்கியது. இதற்காகவாவது லக்னோவை வீழ்த்த ஆர்சிபி ப்ளே ஆப் செல்ல வேண்டும் என நினைத்தனர்.

ஆர்சிபி ப்ளே ஆப் செல்லாவிட்டாலும் ப்ளே ஆப் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபி ரசிகர்களின் ஆசையை செவ்வனே நிறைவேற்றி விட்டது. லக்னோ அணியில் அனைத்து வீரர்களும் அவுட்டாகி வெளியேறியபோது கடைசி வீரராக நவீன் மட்டுமே களத்தில் எஞ்சி விரக்தியில் நின்றிருந்தார். அந்த காட்சியுடன் மாம்பழம் போட்டோவை போட்டு சிலர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் மாம்பழத்தை டேபிளில் வைத்து விட்டு சுற்றிலும் கண், காது, வாயை மூடிக் கொண்டிருக்கும் மூன்று குரங்குகளை பிரதிபலிப்பது போன்று அமர்ந்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Naveen Ul Haq


Edit by Prasanth.K