தொடர்புடைய செய்திகள்
- விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!
- இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!
- பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?
- அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!
சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!
ஐபிஎல் தொடரில் பல மோசமான சாதனைகளைப் படைத்துள்ள அணிகளில் ஒன்று ஆர் சி பி. அந்த அணிதான் ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவான ஸ்கோரை எடுத்த அணி என்ற மோசமான சாதனையைத் தன் வசம் வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தங்கள் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளைப் பெற்ற அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி மழைக் காரணமாக தாமதமானதால் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த இலக்கை 12 ஆவது ஓவரில் துரத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த தோல்வி பெங்களூர் அணிக்கு அவர்களின் சொந்த மைதானத்தில் 46 ஆவது தோல்வியாகும். இதன் மூலம் டெல்லி (45 தோல்விகள்) முந்தி முதல் இடத்துக்கு சென்றுள்ளது பெங்களூர் அணி.