கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? – சென்னை மக்களை கிழித்த அஸ்வின்!

Ashwin
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 17 மார்ச் 2020 (11:42 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை மக்கள் அலட்சியமாக இருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. சுமார் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தமிழக தலைநகரான சென்னையில் மக்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி அலட்சியமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக நாடுகளும், மக்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சென்னை மக்கள் மட்டும் வெயிலில் கொரோனா பரவாது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். நம்புவெதெல்லாம் நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :