ரவி சாஸ்திரியிடம் டிப்ஸ் கேட்ட அர்ஜுன் டெண்டுல்கர்!

Last Updated: செவ்வாய், 26 ஜூன் 2018 (21:24 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலர் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், யு-19 இந்திய அணி ஜூலையில் இலங்கைக்கு எதிராக இரண்டு நான்கு நாள் போட்டியிலும், ஐந்து ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.
 
தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. அப்போது அர்ஜூன் தெண்டுல்கர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசினார்.
 
அப்போது ரவி சாஸ்திரியிடம் சில டிப்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :