1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: புதன், 29 மார்ச் 2023 (14:31 IST)

பவுண்டரியே கொடுக்காமல் 100 பந்து… டி 20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரஷீத் கான்!

டி 20 போட்டிகளில் குறைந்த வயதில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத் கான். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதே போல குறைந்த வயதில் டி 20 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை ரஷித் கான் நேற்று படைத்துள்ளார். நேற்று குப்தில் விக்கெட்டை கைப்பற்றிய போது இந்த சாதனையை படைத்தார்.

இந்நிலையில் இப்போது அவர் டி 20 போட்டிகளில் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி 20 போட்டிகளில் பவுண்டரிகளே கொடுக்காமல் 100 பந்துகள் வீசிய பவுலர் என்ற சாதனையைப் படைத்த ஒரே பவுலர் என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.