1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 மே 2024 (19:04 IST)

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தயாராகியுள்ளன. சன் ரைசர்ஸ், சென்னை, ஆர் சி பி, மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் ரேஸில் உள்ளன.

இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணியில் அதன் முன்னணி வீரர்கள் சில காயம் காரணமாக விலகியுள்ளனர். அது போல இங்கிலாந்து வீரர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என்பதால் வலுவிழந்து காணப்படுகிறது.

கௌகாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப் கிங்ஸ்
பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா(வ), சாம் குர்ரன்(சி), ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்