திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (07:23 IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த ராகுல் டிராவிட்… என்ன பொறுப்பு தெரியுமா?

இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.

அதன்பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆனார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். இதையடுத்து அவர் எதாவது ஒரு ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அது இப்போது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த சங்ககரா அந்த அணியின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் சில சீசன்கள் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.