முழங்காலில் காயம் –முதல் டெஸ்ட் வாய்ப்பை இழந்த தொடக்க ஆட்டக்காரர்!

Last Modified வெள்ளி, 30 நவம்பர் 2018 (10:45 IST)
ஆஸ்திரேலியா லெவன் அணியோடு நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது முழங்காலில்  அடிபட்டுள்ளதால் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் பிரித்வி ஷா.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டித் தொடர்களிலும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இருபது ஓவர் தொடர் 1-1 என சம்நிலையில் முடிந்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா லெவன் உடனான 4 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான இன்று பீல்டிங்கின் போது இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா காயமடைந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் காயத்திற்கு முழுமையாக ஒரு வார கால ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் முதல் டெஸ்ட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவிற்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 237 ரன்களை சேர்த்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :