ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (10:48 IST)

”Pink Ball” ஸ்பின் பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்..” ஹர்பஜன் சிங்

”Pink Ball” ஸ்பின் பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்..” ஹர்பஜன் சிங்
”பிங் பால்” சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே 2 ஆவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இந்தியாவில் விளையாடப்படும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
”Pink Ball” ஸ்பின் பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்..” ஹர்பஜன் சிங்

இந்த போட்டியில் பிங் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ”பிங் பால் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்” என கூறியுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.