திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:05 IST)

வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு!

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு  முன்னர் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று தங்கள் ஆறாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி தங்கள் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.