புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (11:11 IST)

அடிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரரை தூக்கி கொண்டு ஓடிய நியூஸிலாந்து வீரர்கள் – வைரலான வீடியோ!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பையில் அடிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரரை நியூஸிலாந்து வீரர்கள் தூக்கிக் கொண்டு ஓடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நியூஸிலாந்து அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அதில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. 48 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் 238 ரன்களை பெற்றிருந்தது.

இண்டீஸ் வீரர் மெக்கன்ஸி நன்றாக விளையாடி 104 பந்துகளுக்கு 99 ரன்கள் அடித்திருந்தார். ரன் எடுக்க ஓடு வந்தபோது அவரது காலில் அடிப்பட்டது. விக்கெட்டை இழந்த நிலையில் நடக்க முடியாமல் சிரமப்பட்டவரை நியூஸிலாந்து அணியினர் தூக்கி கொண்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் நியூஸிலாந்து வீரர்களின் இந்த செயலை வாழ்த்தியுள்ளனர்.