உலகக் கோப்பையின் முதல் சில போட்டிகளை இழக்கும் பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சி தகவல்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முக்கிய பவுலர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் காயமடைந்தனர். அதனால் அவர்கள் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினர். அவர்களுக்கு பதில் மாற்று பவுலர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இல்லாததும் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்று ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேற ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நசீம் ஷா அடுத்தமாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளையும் இழக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மற்றொரு காயமான பவுலரான ஹாரிஸ் ரவுஃப் பற்றிய உடற்தகுதி அப்டேட் இன்னும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.