1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (20:05 IST)

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் விஜய்?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மக்களுக்காக பணியில் ஆக்டிவாக இயங்கி வருகிறது.

சமீபத்தில், சென்னை, பனையூரில், விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி, இளைஞரணி, மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மக்கள் இயக்க மருத்துவரணி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விஜய் மினி கிளினிக் நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், விஜய் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

மத்திய அரசு பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியைப் பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், ஒரே      நேரத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வந்தால் இதில், விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கலாம் என தகவல் வெளியாகிறது