1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Naveen ul haq announced Retirement from odi cricket

கோலியால் பிரபலமான நவீன் உல் ஹக் எடுத்த திடீர் முடிவு!

நவீன் உல் ஹக்
கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியும், ஆப்கன் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அவரும் பதிலுக்கு விராட் கோலியை ட்ரோல் செய்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியிலும் நவீன் உல் ஹக் பந்துவீசும் போதும் பேட் செய்யும் போதும் கோலி கோலி என ரசிகர்கள் கத்தினர். ஆனால் கத்தவேண்டாம் என கோலி ரசிகர்களை நோக்கி சைகை செய்தார்.

இதையடுத்து  கோலி பேட் செய்த போது நவீன் உல் ஹக் அவரிடம் சென்று கைகொடுத்து சமாதானம் ஆனார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ள நவீன் உல் ஹக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து டி 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
About Writer
vinoth