“இந்திய அணிக்கு அந்த பயம் கொஞ்சம் இருக்கும்..” நியுசிலாந்து முன்னாள் வீரர் கருத்து!
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் நாளை நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.
கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதி போட்டிகளோடு தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் இந்த முறை கண்டிப்பாக அந்த சோகம் தொடராது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் நாளை நடக்க உள்ள போட்டி குறித்து பேசியுள்ள நியுசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் “இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நியுசிலாந்துக்கு எதிராக விளையாடும் போது, கடந்த உலகக் கோப்பையை நினைத்து கொஞ்சம் பயமாக இருக்கும். நியுசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் மூன்று விக்கெட்களை முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்தினால் அது கூடுதல் பலமாக அமையும். அதே போல பேட்டிங்கில் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை இழக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.