ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (10:17 IST)

சூப்பர் ஓவர் போய் அடித்து ஜெயித்த நமீபியா! – உலக கோப்பை டி20 போட்டியில் சுவாரஸ்யம்!

Namibia vs Oman
நடந்து வரும் உலக கோப்பை டி20 போட்டியில் இன்று ஓமன் – நமீபியா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் சூப்பர் ஓவர் வரை சென்று நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.



உலக கோப்பை டி20 லீக் போட்டிகள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் இன்று ஓமன் – நமீபியா அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை எடுத்தது.


பின்னர் சேஸிங்கில் இறங்கிய நமீபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்தது. இரு அணிகளுமே ஒரே ஸ்கோரில் இருந்ததால் சூப்பர் ஓவர் போட்டி வைக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என அடித்து 21 ரன்களை குவித்தது. ஓமன் அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் உலக கோப்பையில் முதல் வெற்றியை அடைந்துள்ளது நமீபியா அணி.

Edit by Prasanth.K