திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2016 (18:35 IST)

விராட் கோலியின் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது : முத்தையா முரளீதரன்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்து தள்ளியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன்.


 

 
இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களாக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள சால்ட்லேக் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
அதில், முத்தையா முரளீதரன் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார். அப்போது அங்கிருந்த இளம் வீரர்கள், முரளீதரனிடம் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார்.
 
ஒரு வீரர் விராட் கோலியை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முரளீதரன் “ விராட் கோலை பார்ஃம் எனும் கனவின் நடுவில் இருக்கிறார். இந்த ஐ.பி.எல். தொடரில் மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான வகையில் விளையாடி வருகிறார். இந்தியாவிற்காகவும், ஐ.பி.எல். தொடருக்காகவும் ரன்களை குவித்து வருகிறார். அவரை யாரும் தடுக்க முடியாது. அவரது பார்ஃம் என்னை வியக்க வைக்கிறது” என்று கூறினார்.