1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mushfiqur rahim performed snake dance in T20 match

கிரிக்கெட் போட்டியில்: பாம்பு ஸ்டைலில் நடனமாடிய வங்கதேச வீரர்

முஷ்பிகுர் ரஹிம்
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றதால். அந்த அணியின் வீக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பாம்பு ஸ்டைலில் நடனம் ஆடினார்.
 
கடந்த சனிக்கிழமை இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் குவித்தது. பெரேரா 74 ரன்களும், மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்தனர்.
 
 215 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேசம், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி இருவரும் சேர்த்து 90 ரன்களை குவித்தனர். அடுத்து ஆட வந்த வீரர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இந்த அணி 19.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
 
இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பாம்பு ஸ்டைலில் நடனம் ஆடினார். இவரது பாம்பு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
முத்தரப்பு டி20 போட்டி: இலங்கையை பழிதீர்க்குமா இந்தியா?