வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (17:44 IST)

பிருத்வி ஷாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை?- முரளி விஜய் பதில்!

இந்நிலையில் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்த அணியில் இடம்பெறவில்லை. அதை முன்னிட்டு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபா புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என முன்னாள் வீரர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் இப்போது இதுகுறித்து பேசியுள்ள முரளி விஜய் “அவருக்கு ஏன் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என அணி நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும். இந்தியாவுக்காக 15 சுப்பர் ஸ்டார்கள் விளையாடுகிறார்கள். திறமையின் அடிப்படையில் பிருத்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை மிகவும் நேசிக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.